Saturday, September 21, 2024

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர்; தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் டி20 தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த 3 போட்டிகளும் டிரிடினாட்டில் முறையே ஆகஸ்ட் 23, 24 மற்றும் 27ம் (இந்திய நேரப்படி ஆகஸ்ட் 24, 25 மற்றும் 28ம் தேதிகளில்) தேதிகளில் நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி விவரம்; எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மென், நாண்ட்ரே பர்கர், டோனோவன் பெரீரா, பிஜோர்ன் போர்டுயின், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், க்வேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கெல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸி வான் டெர் டுசென், லிசார்ட் வில்லியம்ஸ்.

White-ball head coach Rob Walter has today named the 15-player squad for the upcoming three-match T20 International (T20I) series against the West Indies, which gets underway later this month in Trinidad and Tobago.
Commenting on the squad, Walter said: “Several players were not… pic.twitter.com/hx8PJ4d6tX

— Proteas Men (@ProteasMenCSA) August 14, 2024

South Africa name squad for their second T20I series against West Indies this year.
Details ➡ https://t.co/SRzvEKSg7Fpic.twitter.com/KzrxRi08hP

— ICC (@ICC) August 14, 2024

You may also like

© RajTamil Network – 2024