Tuesday, September 24, 2024

புதிய அருங்காட்சியகங்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

புதிய அருங்காட்சியகங்கள் மற்றும் திட்டப்பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அருங்காட்சியகங்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று(14.08.2024) தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சார்பில் முன்மொழியப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அருங்காட்சியகங்கள், குறிப்பாக பொருநை அருங்காட்சியகம், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம், கொடுமணல், ராமநாதபுரம் அருங்காட்சியகம், குற்றாலம், பூண்டி, தருமபுரி அகழ்வைப்பகங்கள் மற்றும் இதர திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

இவ்வாய்வின்போது அருங்காட்சியகங்கள் சிறப்பாக அமைப்பது தொடர்பாகவும், குறிப்பாக தமிழ்நாட்டின் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தின் சிறப்பினை சீருடன் வெளிப்படுத்தும் வகையில் பொருநை அருங்காட்சியகத்தினை அமைக்கவும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024