Saturday, September 21, 2024

ஓ.டி.டி.யில் வெளியான ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி தொடர்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

9 குறும்படங்களின் தொகுப்பை கொண்ட 'மனோரதங்கள்' தொடர் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.

சென்னை,

எம்.டி. வாசுதேவன் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். அசுரவித்து, மஞ்சு, ரண்டமூசம் மற்றும் வாரணாசி ஆகிய படைப்புகளின் மூலம் அறியப்பட்டவர்.

எம்.டி.வாசுதேவனின் திரைக்கதையில் உருவான ஒன்பது படங்களின் தொகுப்பை கொண்டு 'மனோரதங்கள்' தொடர் உருவாகி உள்ளது. இந்தத்தொடரில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

"ஒல்லாவும் தீரவும், கடுகண்ணவ ஒரு யாத்ரா, காட்சி, ஷீலாலிகாதம், வில்பனா, ஷெர்லாக், ஸ்வர்கம் துரக்குண சமயம், அபயம் தீடி வேண்டும், கடல்கட்டு" இந்த 9 படங்களின் தொகுப்பை கொண்டு இந்த 'மனோரதங்கள்' தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 'மனோரதங்கள்' தொடர் இன்று ஜீ-5 ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024