Tuesday, September 24, 2024

திருவிடந்தை கடற்கரை பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழா

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

இந்த ஆண்டு 300 காற்றாடிகளை பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை அமைச்சர்கள் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்து, 3-வது முறையாக நடத்தும் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று முதல் 4 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில் மலேசியா, ஜெர்மனி, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் காற்றாடி பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் என 200-க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாக பிரிந்து காற்றாடிகளை பறக்க விடுகின்றனர்.

கடந்த ஆண்டு 150 காற்றாடியை பறக்கவிட்ட நிலையில் இந்த ஆண்டு 300 காற்றாடிகளை பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024