Saturday, September 21, 2024

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் அப்டேட்!

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

நடிகர் கார்த்தி, ‘வா வாத்தியார்’ படத்தில் தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை,

மெய்யழகன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27 அன்று திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கார்த்தி. இதற்கிடையில் இவர் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி கார்த்தியின் 26வது படமான இந்த படத்திற்கு வா வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரேட் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்கிறார்.

நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தின் மூலம் கார்த்தியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள நிலையில், சத்யராஜ் இப்படத்தில் வில்லனாகவும், நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் படப்பிடிப்புகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நடிகர் கார்த்தி, 'வா வாத்தியார்' படத்தில் தனது பகுதிகளை நிறைவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மற்ற நடிகர்களின் பகுதிகள் இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024