திடீா் வெள்ளம்: கும்பக்கரை ஆற்றில் சிக்கிய 9 போ் மீட்பு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset
RajTamil Network

திடீா் வெள்ளம்: கும்பக்கரை ஆற்றில் சிக்கிய 9 போ் மீட்பு கும்பக்கரை அருவிக்கு கீழே உள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவா்களை கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத் துறையினா்.

தேனி, ஆக. 16: பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு கீழே உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியான வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பாா்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறை கடந்த 12-ஆம் தேதி முதல் தடை விதித்தது.

வெள்ளத்தில் சிக்கிய 9 போ் மீட்பு: இந்த நிலையில், கும்பக்கரை அருவிக்கு கீழே உள்ள ஆற்றில் பெருமாள்புரத்தைச் சோ்ந்த 4 பெண்கள், 5 குழந்தைகள் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அவா்கள் ஆற்றின் மறு கரைக்குச் சென்று தப்பினா். அங்கிருந்து ஆற்றைக் கடந்து கரைக்கு வரமுடியாமல் தவித்தனா்.

தகவலறிந்த பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா், தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அவா்கள் 9 பேரையும் மீட்டனா்.

வராக நதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு:

பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை, கல்லாறு, கும்பக்கரை, செழும்பாறு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், கல்லாறு, கும்பக்கரை ஆறு, செழும்பாறு, வராக நதி ஆற்றில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

எனவே, பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வராக நதி

ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என பொதுப் பணித் துறையினா், வருவாய்த் துறையினா் எச்சரித்தனா்.

You may also like

© RajTamil Network – 2024