சதுரகிரியில் மழை: பக்தர்கள் செல்ல தடை

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

கோவிலில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. இதனால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வந்து கொண்டு இருக்கிறது.

எனவே, சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்து உள்ளனர். மழை காரணமாக ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் எனவே, பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு வர வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024