Saturday, September 21, 2024

ஒரு வாரத்திற்கு ஏ.ஆர்.ரகுமானாக வாழ ஆசைப்படுகிறேன் – தினேஷ் கார்த்திக்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

தான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஒரு வாரத்திற்கு வேறு ஒரு நட்சத்திரமாக வாழ வேண்டுமென்றால், யாராக வாழ்வதற்கு விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், "ஒரு வாரத்திற்கு என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானாக வாழ ஆசைப்படுகிறேன். அவரின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன். இதுவரை ஒருமுறை கூட அவரை நேரில் சந்தித்ததில்லை. அவர் எப்படி அவ்வளவு புதுமைகளை உருவாக்குகிறார் என்பதை அறிய விரும்புகிறேன். அவர் ஒரு ஜீனியஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறந்த இசையை அளித்து வருகிறார். அதனால் அவரின் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க வேண்டும். அவர் இரவு நேரங்களில் அதிகமாக பணியாற்றுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுதான் எனக்கு சவாலாக இருக்கும். ஆனாலும் அவர் நினைவுகளுக்குள் செல்ல வேண்டும் என்பதால், கவலையில்லை" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024