புரட்டாசியில் கூட ஆட்டுக்கறி சாப்பிடலாம்.. மட்டன் டேஸ்டில் ஒரு காய்கறி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

புரட்டாசியில் கூட ஆட்டுக்கறி சாப்பிடலாம்… மட்டன் டேஸ்டில் ஒரு காய்கறி…புரட்டாசியில் கூட ஆட்டுக்கறி சாப்பிடலாம்.. மட்டன் டேஸ்டில் ஒரு காய்கறி

புரட்டாசியில் கூட ஆட்டுக்கறி சாப்பிடலாம்.. மட்டன் டேஸ்டில் ஒரு காய்கறி

மேற்குவங்கத்தில் மிக பிரபலமாக உள்ள காய்களில் ஒன்று கும்ஹர் (Kumhar). இது நாட்டின் சில பகுதியில் பேத்தா என்றும் குறிப்பிடப்படுகிறது. மேற்குவங்கத்தை சேர்ந்த மிதிலா பகுதி மக்கள் இந்த கும்ஹர் காய்கறியை மிகவும் விரும்புகிறார்கள்.

ஏனெனில் இந்த பகுதி மக்கள் இந்த காய்கறியை சைவ ஆட்டிறைச்சி என்று அழைக்கிறார்கள். குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அங்கு கிடைக்கும் இந்த காய்கறி அப்பகுதி மக்களுக்கு உண்மையில் மிகவும் ஸ்பெஷலானது. இந்த காய் பச்சையாக இருக்கும் போதே சிறுசிறு பீஸ்களாக வெட்டி உலர வைத்து விடுகிறார்கள்.

விளம்பரம்

பின்னர் ஆண்டு முழுவதும் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். கும்ஹர் அல்லது சல்கும்ரா என்று குறிப்பிடப்படும் இந்த காய்கறி தமிழில் வெண்பூசணி ஆகும். வெண்பூசணியின் ஒரு ரகமாகவே இந்த கும்ஹர் உள்ளது.

இதையும் படிங்க: வாழைத்தாரில் மறைந்திருந்த ஆச்சரியம்… மறுவாழ்வளித்த வாழை வியாபாரி…

மிதிலா பகுதியில் மேற்சொன்னது போல இந்த காய்கறி பீஸ் பீஸாக நறுக்கப்பட்டு உலர்த்தி விற்கப்படுகிறது. ஆட்டிறைச்சி போன்ற சுவையடையதாக கூறப்படும் இந்த உலர் காய்கறி ஒரு கிலோ 700 முதல் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை வந்தனா ஜா என்ற பெண் வீட்டிலேயே தயாரித்து உள்ளூர் மார்க்கெட்களிலும், ஆன்லைன் தளங்களிலும் விற்கிறார்.

விளம்பரம்

குறிப்பிட்ட சீசனில் மட்டுமே இந்த காய் அங்கே கிடைப்பதால் சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காயவைத்து சேமித்து வைக்க அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இந்த ட்ரை பேத்தாவை எவ்வாறு தயாரிப்பது என்று கற்று கொடுக்கிறார்கள்.

இதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். பல வருடங்களாக இந்த தொழிலை வந்தனா ஜா செய்து வருகிறார். இந்த காய்கறிகளை கட் செய்து உலர வைத்து ஆண்டு முழுவதும் வைத்து மக்கள் பயன்படுத்த ஏதுவாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் வந்தனாவின் கணவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் குடும்ப பாரம் அதிகமான நிலையில் தனது வீட்டு வேலைகளின் ஒரு பகுதியாக இந்த காய்கறிகளை தயார் செய்து விற்று வருகிறார்.

விளம்பரம்

இதையும் படிங்க: கயாவில் பித்ருக்கள் வழிபாடு… தென் மாவட்ட பயணிகளுக்காக நெல்லை – பாட்னா சிறப்பு ரயில்…

வீட்டில் இருந்த போது என் அம்மா இந்த கும்ஹர் காய்கறி தயாரிப்பதை பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் ஆர்வம் ஏற்பட்டு அப்போதே அம்மாவிடம் இந்த காய்கறியை தயாரிக்கும் முறையை கற்று கொண்டேன் என வந்தனா கூறி உள்ளார். இப்பகுதி மக்கள் பல வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கின்றனர். மேலும் அவற்றை சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம் நல்ல வருமானம் பெற்று வருகிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Healthy Food
,
Healthy Lifestyle
,
Local News

You may also like

© RajTamil Network – 2024