Friday, September 20, 2024

துருக்கி பாராளுமன்றத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட எம்.பி.க்கள்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

துருக்கி நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்த குற்றச் சாட்டில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலை வர் கேன் அட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதுதொடர்பாக துருக்கி பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியை சேர்ந்த எம்.பியான அஹ்மத் சிக் பேசி னார். அப்போது அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சியை "பயங்கரவாத அமைப்பு என்று கூறினார்.அவர் கூறும்போது, உங்க ளுக்கு (ஆளும் கட்சி)ஆதரவாக இல்லாததால் கேன் அட்டாலை ஒரு பயங்கரவாதி என்று அழைப்பதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை.

ஆனால் இந்த இருக்கை களில் அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கர வாதிகள் என்றார். இதற்கு ஆளும் கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டி ருந்த அஹ்மத் சிக்கை முகத் தில் தாக்கி கீழே தள்ளினார்.

இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைகலப் பில் ஈடு பட்டனர். ஒருவருக்கொரு வர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அவர்களை சண்டையை கைவிடும்படி துணை சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் எம்.பி.க்கள் மாறி மாறி தாக்கி கொண்டனர். அவர்களை சில எம்.பிக்களும், பாது காப்பு அதிகாரிகளும் தடுத்து நிறுத்தி விலக்கி விட்டனர்.இந்த தாக்குதலில் பெண் எம்.பி. ஒருவர் உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் சிலரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாராளு மன்றத்தை மூன்று மணி நேரத்துக்கு துணை சபாநா யகர் ஒத்தி வைத்தார். அதன்பின் சபை கூடியதும் ஆளும் கட்சிக்கு எதிரான அறிக்கைகளுக்காக அஹ்மத் சிக்யை நாடாளுமன்றம் கண்டித்தது. மேலும் அவர் மீது தாக்குதல் நடத்திய அல்பாய் ஓசலன் எம்.பி.யும் கண்டிக்கப்பட்டார்.இதுதொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான சி.பி.எச் தலைவர் ஒஸ்க்கர் கூறும்போது, இது வெட்கக் கேடானது. காற்றில் பறக்கும் வார்த்தைகளுக்குப் பதிலாக, கைமுட்டிகள் பறக்கின்றன, தரையில் ரத்தம் கொட்டு கிறது. அவர்கள் பெண் களைத் தாக்கினார்கள் என்றார்.

You may also like

© RajTamil Network – 2024