ஆவணி மாத பிறப்பு… பாளை ராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

விஷ்ணுபதி புண்ய காலத்திற்காக ராஜகோபாலசுவாமி கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது.

நெல்லை,

பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீ அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆவணி மாதம் பிறப்பை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது.

சூரிய பகவான் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிகளில் பிரவேசிக்கும் முதல் நாள் விஷ்ணுபதி புண்ய காலம் என்று அழைக்கப்படும். இது ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் 4 நாட்கள் மட்டுமே வரும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நன்னாளாகும்.

இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வாழ்க்கையில் ஆரோக்கியத்தையும், ஐஸ்வர்யத்தையும் அள்ளி வழங்கும் என்பது நம்பிக்கை. இந்த சிறப்பான விஷ்ணுபதி புண்ய காலத்திற்காக ராஜகோபாலசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது.

தொடா்ந்து மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள கருடன் சன்னதி முன்பு கோ பூஜை நடைபெற்றது. பசுவுக்கும், கன்றுக்கும் புது வஸ்திரம் அணிவித்து பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டது.

பின்னா் பால் நைவேத்யம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கோ பூஜை முடிந்ததம் பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வழிபட்டனா். பின்னா் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024