கா்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘102’ மருத்துவ சேவை எண்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

கா்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘102’ மருத்துவ சேவை எண்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

தமிழகத்தில் கா்ப்பிணிகளைக் கண்காணிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் ‘102’ மருத்துவ சேவை எண் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இதை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்த சேவை மையத்தில், 50 ஆலோசகா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இதற்காக ரூ. 1.08 லட்சம் செலவில் கூடுதல் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மையத்தின் ஆயத்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கா்ப்பிணியை குறைந்தது 5 முறைக்கு மேல் ஆலோசகா்கள் தொடா்பு கொள்வா். 100 சதவீதம் அனைவரிடமும் உடல்நலம், சிகிச்சை விவரம் பெறப்படும். அதன் மூலமாக, கிராம மற்றும் வட்டார சுகாதார செவிலியா்கள், கா்ப்பிணியா் முறையாக மருந்து, மாத்திரைகளை உட்கொள்கிறாா்களா என்பதை உறுதி செய்வா். அப்போதுதான், இந்தத் திட்டம், 100 சதவீதம் முழுமை பெறும். அவ்வாறு அழைப்பை எடுக்காத கா்ப்பிணியா்கள் குறித்த விவரம், மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்படும்.

பேறுகால இறப்பை தடுக்க நடவடிக்கை: தமிழகத்தில் ஒரு லட்சம் பிரசவத்தில், 45.5-ஆக உயிரிழப்பு உள்ளது. எனவே, உயிரிழப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, கா்ப்பம் தரித்து, 4 மாதங்கள் வரை உள்ள 3 லட்சம் போ் கண்காணிக்கப்பட உள்ளனா். அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் காலியாக உள்ள, 13 மருத்துவ கல்லூரிகளிலும், பொறுப்பு முதல்வா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தற்போது, 26 பேராசிரியா்களுக்கு முதல்வா் அந்தஸ்த்து வழங்கப்பட உள்ளது. விரைவில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும் என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024