Friday, September 20, 2024

ஐ.என்.எஸ். அடையாறு கடலோர காவல்படை வளாகத்தில் புதிய கட்டடம் – மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் வகையில், 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பேசுகிறார். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த நிலையில் சென்னையில் ஐ.என்.எஸ். அடையாறு கடலோர காவல்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல்சார் மீட்பு, ஒருங்கிணைப்பு மைய கட்டடத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சென்னை துறைமுக மண்டல கடல் மாசு நிவாரண மையம், புதுச்சேரி கடலோர காவல்படை விமான வளாகம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

#JUSTIN || சென்னையில் ஐ.என்.எஸ். அடையாறு கடலோர காவல்படை வளாகத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்புதிதாக கட்டப்பட்டுள்ள கடல்சார் மீட்பு, ஒருங்கிணைப்பு மைய கட்டடத்தை திறந்து வைத்தார்தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்புசென்னை துறைமுக மண்டல கடல் மாசு நிவாரண… pic.twitter.com/M7cpSX8wK6

— Thanthi TV (@ThanthiTV) August 18, 2024

You may also like

© RajTamil Network – 2024