வைகாசி கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

by rajtamil
0 comment 67 views
A+A-
Reset

வைகாசி மாத கிருத்திகை முருகனுக்கு விசேஷ தினம் என்பதால் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், மற்றும் கிருத்திகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று வைகாசி மாத கிருத்திகை முருகனுக்கு விசேஷ தினம் என்பதால் அண்டை மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி வந்தும் சாமி தரிசனம் செய்தனர். இதனால், பொதுவழியில், பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

அதே போல் ரூ.100 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024