Friday, September 20, 2024

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி

by rajtamil
0 comment 38 views
A+A-
Reset

டெல்லி,

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாக தொடர்கிறது. இது பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.

அதன்படி, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024