அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வு.. பீதியடைந்த மக்கள்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வு.. பீதியடைந்த மக்கள்… ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!நில அதிர்வு

நில அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள பாரமுல்லாவில் இன்று காலை 6.45 மணிக்கு முதல் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. பாரமுல்லாவை மையமாக கொண்டு 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கட்டடங்கள் லேசாக ஆட்டம் கண்டன.

#JUSTIN ஜம்மு காஷ்மீரில் நில நடுக்கம் – 4.9 ரிக்டர் அளவு பதிவு #Baramulla#Jammuandkashmir#Earthquake#News18TamilNadu | https://t.co/3v5L32pe7bpic.twitter.com/ObePiTbiBG

— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 20, 2024

விளம்பரம்

முதல் அதிர்வு ஏற்பட்ட சில நிமிடங்களில், அதாவது 7 நிமிட இடைவேளையில் காலை 6.52 மணிக்கு இரண்டாவது அதிர்வும் அதே பகுதியில் பதிவானது. இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. அடுத்தடுத்த நில அதிர்வுகளால் கட்டடங்கள் குலுங்கினாலும், பொருட்சேதமோ, உயிரிழப்போ நல்வாய்ப்பாக பதிவாகவில்லை. அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
earthquake
,
Jammu and Kashmir

You may also like

© RajTamil Network – 2024