Thursday, September 19, 2024

திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் அக்டோபர் 4-ம் தேதி ஆரம்பம்- நிகழ்ச்சி முழு விவரம்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவை நடக்கிறது. அக்டோபர் 8-ம் தேதி கருட சேவை நடைபெறும்.

திருப்பதி திருமலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருவிழா நடைபெறும். ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த விழாக்களில் மிகவும் விஷேசமான விழாவாக பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. இந்த விழாவைக் காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக, கருட வாகனத்தன்று திருமலையில் எங்கு திரும்பினாலும் பக்தர்களின் தலைகளாக காட்சியளிக்கும்.

அவ்வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை 9 நாட்கள் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. விழா தொடங்குவதற்கு முன்னதாக, அக்டோபர் 3-ம் தேதி அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவை நடக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி மட்டும் மாலையில் வாகன சேவை நடைபெறாது. பிரம்மோற்சவ நாட்களில் காலை மற்றும் மாலையில் நடைபெறும் வாகன சேவை தொடர்பான முழு விவரம் வருமாறு:

04/10/2024 மாலை 5:45 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம்: இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி உலா

05/10/2024 காலை 8 மணி சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா. இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனம்

06/10/2024 காலை 8 மணி சிம்ம வாகனம்: இரவு 7 மணி முத்துப்பந்தல் வாகனம்

07/10/2024 காலை 8 மணி கற்பகவிருட்ச வாகனம்: இரவு 7 சர்வபூபால வாகனம்

08/10/2024 காலை 8 மணி மோகினி அவதாரம், இரவு 6:30 மணி கருட வாகனம்

09/10/2024 காலை 8 மணி ஹனுமந்த வாகனம், மாலை 4 மணி தங்க ரதம்: இரவு 7 மணி யானை வாகனம்

10/10/2024 காலை 8 மணி சூர்ய பிரபை வாகனம்: இரவு 7 மணி சந்திர பிரபை வாகனம்

11/10/2024 காலை 7 மணி தேரோட்டம்: இரவு 7 மணி குதிரை வாகனம்

12/10/2024 காலை 6 மணி சக்கர ஸ்நானம்: இரவு 8:30 மணி கொடியிறக்கம்.

பிரம்மோற்சவ விழாவின் 2-வது, 3-வது மற்றும் நான்காவது நாட்களில் ரங்கநாயகுல மண்டபத்தில் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெறும்.

You may also like

© RajTamil Network – 2024