உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

இளம்பெண்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவுஇளம்பெண்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

இளம்பெண்கள் அவர்களின் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்துகொள்ளவேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற கருத்தை தவிர்க்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு இளைஞர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த இளைஞர் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த உடலுறவு, இருவரின் சம்மதத்துடன் தான் நடந்துள்ளது என்றும், அந்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் இது குற்றமாகது என்றும் தீர்ப்பளித்து, அந்த இளைஞரை விடுதலை செய்தது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவில் மிகவும் ஏழ்மையான மாநிலம் எது? தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?

மேலும் கொல்கத்தா நீதிமன்றம், “இளம்பெண்கள் அவர்களின் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்கள் கொடுக்கும் 2 நிமிட சந்தோஷத்திற்காக அவர்கள் தான் இந்த சமூகத்தில் தோல்வியடைந்தவராகவும், வாழ்க்கையை இழந்தவராகவும் பார்க்கப்படுகிறார்” என தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

‘தங்கலான்’ ஆரத்தி ரோலில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் தெரியுமா.!
மேலும் செய்திகள்…

இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையான நிலையில், மேற்கு வங்க அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மேலும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க மனு அளித்தது.

விளம்பரம்

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவர்களது சொந்த கருத்தை போதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியது. மேலும் இந்த வழக்கில் உள்ள முகாந்தரத்தை வைத்து மட்டும் தீர்ப்பளிக்கவும் என கேட்டுக்கொண்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றம் அந்த இளைஞருக்கான 20 வருட சிறை தண்டனையை உறுதிபடுத்தி தீர்ப்பளித்தது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
delhi
,
high court
,
kolkata
,
Supreme court

You may also like

© RajTamil Network – 2024