Saturday, September 21, 2024

அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி)செயலாளர் னிவாஸ், அனைத்துமருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய சமூகநலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர்கள் சார்பில் சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணைய தலைவருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், மருத்துவக் கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் புழக்கமில்லா இந்தியா திட்டத்தின் கீழ் சில செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, கல்வி வளாகங்களுக்குள் போதைப் பொருள் இல்லாத சூழலை ஏற்படுத்தி, அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கி, கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் அதனை ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர் விடுதிகளில்.. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நாஷா முக்த் பாரத் அபியான் எனப்படும் போதைப் பொருள் இல்லாத தேசம் திட்டத்தின்கீழ் சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். முக்கியமாக, மாணவர் விடுதிகளில் அந்த குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆண்டு முழுவதும் இதுதொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.

அவ்வாறு வகுக்கப்பட்ட செயல் திட்டங்களின் அடிப்படையில், எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த அறிக்கையை விரிவாகமத்திய சமூகநலத் துறைக்குஅனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024