Saturday, September 21, 2024

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்துவீச்சு…இலங்கை 236 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட் , அட்கின்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

மான்செஸ்டர்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனிடையே இங்கிலாந்து அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகிய நிலையில், ஒல்லி போப் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி தனஞ்ஜயா டி சில்வா தலைமையில் களமிறங்க உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜயா டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கருணாரத்னே 2 ரன்களும் , நிஷான் மதுஷ்கா 4 ரன்களும் , மேத்யூஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து குசல் மென்டிஸ் 24 ரன்களும் , சன்டிமல் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து தனஞ்ஜெயா டி சில்வா , ரத்னநாயகே இருவரும் சிறப்பாக விளையாடினர். நிலைத்து ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்களும் , ரத்னநாயகே 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட் , அட்கின்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன் எடுத்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024