Saturday, September 21, 2024

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' படத்தின் இரண்டாவது பாடலான 'சொன்னாரு நைனா' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். 'ஆயுத எழுத்து' என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் தயாரித்து நடித்த சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்போது கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது, ராஜேசகர் இயக்கத்தில் 'மிஸ் யூ' என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையில் படத்தின் முதல் பாடலான 'தமாதமா' என்ற பாடல் வெளியானது. இந்தப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் யாசின் நிசார், குரு ஹரிராஜ் இணைந்து பாடியுள்ளனர். இந்தநிலையில் தற்போது, 'சொன்னாரு நைனா' என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் சித்தார்த் பாடியுள்ளனர்.

Here's a quirky number, something new I've attempted. Thanks to @Music_Santhosh & #Siddharth for lending their amazing voice #sonnarunainaa from #missyou is out now!@7Milesps@cvsam@Dir_RajasekarN@AshikaRanganath#karunakaran@bala_actor@[email protected]… pic.twitter.com/cSbNC5WQdX

— Ghibran Vaibodha (@GhibranVaibodha) August 21, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024