அமெரிக்காவில் பிரமாண்ட 90 அடி உயர அனுமன் வெண்கல சிலை திறப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

வாஷிங்டன்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல அனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. 'ஒன்றிணைப்பு சிலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தசிலை இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான அனுமன் சிலை மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலை ஆகும்.

நிய யாா்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி) மற்றும் புளோரிடாவின் ஹாலண்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி) ஆகியவை அமெரிக்காவின் முதல் 2 உயரமான சிலைகள் ஆகும். டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருந்து சுமாா் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் சுகா் லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோவில் வளாகத்தில் இந்தப் பிரம்மாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற 'பிராண பிரதிஷ்டை' நிகழ்வில் ஹெலிகாப்டா் மூலம் சிலைக்கு மலா் தூவி, புனித நீா் தெளித்து, 72 அடி நீள மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீராமா் மற்றும் அனுமன் நாமங்களை பக்தியோடு கோஷங்களை எழுப்பினர்.

You may also like

© RajTamil Network – 2024