வார்சாவில் இருந்து உக்ரைன் புறப்பட்டார் பிரதமர் மோடி

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

வார்சா,

சுமார் 2 ஆண்டுகளாக ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. ரஷியாவிடம் இருந்து மலிவு விலையில் இந்தியா எண்ணெய் வாங்குகிறது. மற்ற நாடுகள் ரஷியாவை கண்டித்தபோதிலும் இந்தியா இதுவரை கண்டித்தது இல்லை. பிரதமர் மோடி 3-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு சமீபத்தில் ரஷியாவுக்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். 21-ம் தேதி அவர் டெல்லியில் இருந்து போலந்துக்கு சென்றார். போலந்து சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் மோடியும், போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க்கும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது பற்றி அவர்கள் விவாதித்தனர்.

அதனை தொடர்ந்து போலந்து பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, தனி விமானத்தில் உக்ரைன் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து ரெயில் போர்ஸ் ஒன்' என்ற சொகுசு ரெயிலில் கீவ் நகருக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார். பயண நேரம் 10 மணி நேரம் ஆகும்.

இதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் ஆகியோரும் அந்த ரெயிலில் கீவ் நகருக்கு சென்றுள்ளனர். கீவ் நகரில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

You may also like

© RajTamil Network – 2024