சந்திரயான் -3 எடுத்த பிரத்யேக புகைப்படங்களை இன்று வெளியிடுகிறது இஸ்ரோ

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

சந்திரயான் -3 எடுத்த பிரத்யேக புகைப்படங்களை இன்று வெளியிடுகிறது இஸ்ரோ !சந்திரயான் -3 எடுத்த பிரத்யேக புகைப்படங்களை இன்று வெளியிடுகிறது இஸ்ரோ !

முதல் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் எடுத்த பிரத்யேக புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிடவுள்ளது.

கடந்தாண்டு இதே நாளில், உலகமே இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் வகையில், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சாதனையை காலத்திற்கும் நினைவில் வைத்திருக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், முதல் தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிடுகிறது. அதற்கு முன்பு, SNEAK PEAK எனப்படும் அந்த புகைப்படங்களுக்கான முன்னோட்டத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

National Space Day – 2024
Is here!
Join the celebrations at https://t.co/msTmSmUJcY#NSpD2024@DrJitendraSingh

— ISRO (@isro) August 23, 2024

விளம்பரம்

அதன்படி, பிரக்யானில் உள்ள கேமராவில் பதிவான 4 புகைப்படங்கள் மற்றும் விக்ரமில் இருந்த லேண்டர் இமேஜ் மற்றும் ரோவர் இமேஜ் எடுத்த 4 புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில், நிலவில் இந்தியாவின் அசோக சக்கரத்தை பதிவிட பிரக்யான் மேற்கொண்ட முயற்சியும் பதிவாகி உள்ளது.

இதையும் படிக்க:
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் : முடிவுக்கு வந்தது மருத்துவர்கள் போராட்டம்!

ஆனால், நிலவின் தென்துருவத்தில் உள்ள மண்ணின் தன்மை எதிர்பார்த்ததை விட வேறு மாதிரி இருந்ததால், அசோக சக்கரத்தை பதிவிடும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும் இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Indian space research organisation
,
ISRO
,
space

You may also like

© RajTamil Network – 2024