Friday, September 20, 2024

நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

காத்மண்டு,

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து 43 பேர் பஸ்சில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர்.

நேபாளத்தின் பொக்காராவில் இருந்து இன்று காலை காத்மாண்டு நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்றுகொண்டிருந்த பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், ஆற்றில் கவிழ்ந்து பஸ் விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்தனர். இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024