Friday, September 20, 2024

கம்பீர் கூறிய ஆலோசனைகள் எனக்கு பெரிதும் உதவின – இங்கிலாந்து அதிரடி வீரர் பாராட்டு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கம்பீர் தமக்கு சிறந்த பயிற்சியை கொடுத்ததாக பில் சால்ட் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். தோனி தலைமையில் 2007 (டி20), 2011 (ஒருநாள்) உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக முக்கிய பங்காற்றினார். அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளது.

இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் கவுதம் கம்பீர் தமக்கு சிறந்த பயிற்சியை கொடுத்ததாக இங்கிலாந்து அதிரடி வீரர் பிலிப் சால்ட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் இந்தியாவுக்கு வந்து ஐபிஎல் கோப்பையை வெல்வது சிறந்த அனுபவமாக இருக்கும். இந்திய ரசிகர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் கவுதம் கம்பீர் புதியவர் அல்ல என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி அவரின் சாதனைகள் பேசுகின்றன. அவருடைய ஆலோசகர் பாத்திரத்தில் அவர் சொல்வதை நானும் கேட்டேன். அவர் ஒரு சிறந்த போட்டியாளர். அந்த கண்ணோட்டத்தில் நான் அவருடன் உண்மையில் தொடர்பு கொள்ள முடியும். அவர் எப்போதும் அணியை எப்படி வெற்றிக்கொட்டை தாண்ட வைக்க முடியும் என்பதை தேடுகிறார். அதனால் அவருடன் வேலை செய்வதை விரும்பினேன். குறிப்பாக இந்தியாவில் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அறிவுரையை அவரிடமிருந்து நான் பெற்றேன்.

கொல்கத்தாவில் முதல் முறையாக பயிற்சி எடுத்தபோது 'நீங்கள் ரன்கள் அடிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உங்களின் பெரும்பாலான ரன்களை நீங்கள் 10 – 20 ஓவர்களில் அடிப்பதை நான் விரும்புகிறேன்' என்று சொன்னார். அதற்காக நீங்கள் உங்களுடைய ஆட்டத்தை மெதுவாக தொடங்கினாலும் 10 ஓவரிலிருந்து பெரிய ரன்கள் குவிப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களால் அங்கே வேகமாக ரன்கள் குவிக்க முடியும். அது போன்ற ஆலோசனைகளை கொடுத்த கம்பீரிடம் எனக்கு சிறந்த பயிற்சி கிடைத்தது" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024