ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்: 3 பேர் பலி

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

பெர்லின்,

ஜெர்மனி நாட்டில் சொலிங்ஜென் நகரம் உள்ளது. இந்நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் சொலிங்ஜென் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுர்க்கத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 2 ஆண்கள் (வயது 56, 67) மற்றும் ஒரு பெண் (வயது 56) என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பழிவாங்கவே கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024