Friday, September 20, 2024

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.

நியூயார்க்,

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), நோவக் ஜோகோவிச் (செர்பியா), கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) ஆகிய மூவர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.629 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு ரூ.30 கோடி பரிசாக கிடைக்கும். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியும் பெறுவார்கள். 2-வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்படும். ஒற்றையர் முதல் சுற்றில் கால் பதித்தாலே ரூ.83 லட்சம் தொகையுடன் தான் வெளியேறுவார்கள். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.6¼ கோடி பரிசாக கிடைக்கும்.

You may also like

© RajTamil Network – 2024