Friday, September 20, 2024

2வது டி20; தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

வெஸ்ட் இண்டீஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

டிரினிடாட்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக அலிக் அத்தனாஸ் , ஷாய் ஹோப் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடி காட்டினர். அலிக் அத்தனாஸ் 28 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷாய் ஹோப் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிக்கோலஸ் பூரன் 19 ரன்களிலும் , ரோஸ்டன் சேஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து பவெல் அதிரடியாக விளையாடி 35 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 179 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் லிசாத் வில்லியம்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 180 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

தொடக்கத்தில் ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடினர். ரீசா ஹென்ட்ரிக்ஸ் அதிரடியாக ரன்கள் குவித்தார்.ப ரியான் ரிக்கல்டன் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரீசா ஹென்ட்ரிக்ஸ் 44 ரன்களிலும் , மார்க்ரம் 19 ரன்களிலும், ஸ்டப்ஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள்'அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 19.2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷாமார் ஜோசப் , ரோமரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியால் 3 போட்டிகளை கொண்ட தொடரை 2-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024