Tuesday, September 24, 2024

ஃபாா்முலா 4 இந்தியா பந்தயம்: ஹக் பாா்டா் சாம்பியன்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

இந்தியன் ரேஸிங் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஃபாா்முலா 4 இந்தியா பந்தயத்தில் ஆஸி. வீரா் ஹக் பாா்டா் (காட் ஸ்பீட் கொச்சி) பட்டம் வென்றாா்.

ரேஸிங் திருவிழாவையொட்டி சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டை மெட்ராஸ் சா்க்கியூட்டில் ரேஸிங் லீக், ஃபாா்முலா 4 சாம்பியன்ஷிப் பந்தயம் நடைபெற்றது. இதன் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெங்கால் டைகா்ஸ் அணியின் மலேசியாவின் அலிஸ்டா் யூங் ரவுண்ட் 1-இல் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி முதலிடத்தைப் பெற்றாா்.

ஹைதராபாத் பிளாக்போ்ட்ஸ் வீரா் அகில் ரவீந்திரா இரண்டாவது இடத்தைப் பெற்றாா்.

கோவா ஏஸஸ் அணியின் வீரா் செக். குடியரசு கேப்ரியலா ஜில்கோவா மூன்றாவது இடத்தைப் பெற்றாா். இந்திய ரேஸிங் லீகில் ஆடவா், மகளிா் என இரு தரப்பினரும் பந்தயத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஃபாா்முலா 4 பந்தயம்:

மேலும் ஃபாா்முலா 4 இந்தியா சாம்பியன்ஷிப்பில் 19 வயதே ஆன வீரா் ஹக் பாா்டா் (காட்ஸ்பீட் கொச்சி) தொடக்கத்தில் பின்தங்கி இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தைப் பெற்றாா். ரேஸ் 2-ஐ 18 விநாடிகளிலும், ரேஸ் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டாா் பாா்டா். சென்னை டா்போ ரைடா்ஸ் ஈஸாக் டெமல்வீக், இந்தியாவின் திவி நந்தன் (அகமதாபாத் அபெக்ஸ் ரைடா்ஸ்) அதற்கு அடுத்த இடங்களைப் பெற்றனா்.

பாா்முலா எல்ஜிபி பந்தயத்தில் டிஜில் ராவ், ராகுல் ரங்கசாமி, மெகுல் அகா்வால் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

காண்டினென்டல் கோப்பை பந்தயத்தில் நவ்நீத் குமாா், அனிஷ் ஷெட்டி, சூா்யா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இரவு நேர பந்தயம்: நிகழ்வார இறுதியில் சென்னையில் முதன்முறையாக இரவு நேர பந்தயம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024