Wednesday, September 25, 2024

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக பிரபல இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முதல் போட்டியில் இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு வலது தொடையில் தசைபிடிப்பு ஏற்பட்டது. அதன்பின், அவர் பந்துவீசவில்லை.

நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்… சொல்லப் போனால்

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக மார்க் வுட் விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மார்க் வுட்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸாக் கிராலி இருவரும் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. தற்போது காயம் காரணமாக மார்க் வுட் விலகியுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மார்க் வுட்டுக்குப் பதிலாக அணியில் ஜோஸ் ஹல் சேர்க்கப்பட்டுள்ளார்.

பல நினைவுகளை கொடுத்துள்ளீர்கள்; ஷிகர் தவானுக்கு விராட் கோலி வாழ்த்து!

இங்கிலாந்து அணி விவரம்

ஆலி போப் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஹாரி ப்ரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், ஜோஸ் ஹல், டான் லாரன்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024