Wednesday, September 25, 2024

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சென்னை: திண்டுக்கல் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் சனிக்கிழமை(ஆகஸ்ட் 24) பிற்பகல் 3.30 மணியளவில் வெடிமருந்து தயாரிக்கும் பணியின்போது எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்து.

மதுரை – செங்கோட்டை ரயில் நேரம் 4 நாள்களுக்கு மாற்றம்!

இதில், சிவகாசி, திருத்தங்கல், முத்துமாரியம்மன் காலனியைச் சோ்ந்த கண்ணன் (எ) சின்னன் (42) மற்றும் சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் (எ) மாசா (30) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

You may also like

© RajTamil Network – 2024