Sunday, September 29, 2024

அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுஉக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு

அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் இருந்து பிரதமர் மோடிக்கு திங்களன்று தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் வலுவான மக்கள் உறவு மதிப்புகளை கொண்ட இந்தியா-அமெரிக்க உலகளாவிய கூட்டாண்மைக்கு அதிபர் பைடனின் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியும் அதிபர் பைடனும் பல விஷயங்களில் விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். உக்ரைன் நிலைமை குறித்து விவாதித்த மோடி, உக்ரைனுக்கு தனது சமீபத்திய பயணம் குறித்து அதிபர் பைடனுக்கு விளக்கினார். இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு விரைவில் திரும்புவதற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.

விளம்பரம்

Also Read :
இந்தியாவின் மிக நீண்ட ஐடி ரெய்டு – ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு மட்டும் 10 நாட்கள்! எங்கு தெரியுமா?

இதேபோல், வங்கதேசம் நிலைமை குறித்து இரு தலைவர்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கை மீட்டெடுத்து, இயல்புநிலையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும் அங்கு சிறுபான்மையினரின் குறிப்பாக இந்துக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதையும் இருவரும் வலியுறுத்தினர்.

குவாட் உட்பட பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். தொடர்ந்து, இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்த இரு தலைவர்களும், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை இரு நாட்டு மக்களுக்கும், மனித குலத்துக்கும் நன்மை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை எடுத்துரைத்தனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
joe biden
,
PM Narendra Modi

You may also like

© RajTamil Network – 2024