Saturday, September 21, 2024

நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

பெங்களூரு சிறையில் சலுகை காட்டிய விவகாரம் : நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம் : அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்பெங்களூரு சிறையில் சலுகை காட்டிய விவகாரம் : நடிகர் தர்ஷன் வேறு சிறைக்கு மாற்றம் : அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

கொலை வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், வீடியோ காலில் பேசிய காணொலி வெளியான நிலையில், அவரை வேறு சிறைக்கு மாற்ற முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவிற்கு சமூக வலைதளத்தில் தொல்லை கொடுத்த, தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர், பவுன்சர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறை வளாகத்திற்குள் நாற்காலியில் அமர்ந்து தர்ஷன் சிகரெட் புகைத்தப்படி நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து, சிறைக்குள் இருந்தப்படி தர்ஷன் வீடியோ காலில் பேசிய காணொலியும் வெளியானது.

விளம்பரம்

ವಿಡಿಯೋ call ಮಾಡಬಹುದು, ನೀವು ಜೈಲಿನಿಂದ.. 🙄🙄🙄@dasadarshan#Darshan#DarshanVideoCall#WilsonGardenNaga#ParappanaAgrahara#DarshanInJail#DarshanInJailPhoto#RenukaswamyCasepic.twitter.com/H9itdgVfWo

— Troll Politics (@shivu7272) August 25, 2024

விளம்பரம்

சுமார் 25 விநாடிகள் ஓடும் இந்த காணொலியில் நடிகர் தர்ஷன் மகிழ்ச்சியாக புன்னகை பொங்க பேசிய காட்சி இடம்பெற்றுள்ளது. சிறையில் தர்ஷனுக்கு சலுகை வழங்கப்படுவது தொடர்பாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சிறைக்காவலர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

இந்நிலையில், சிறைக்காவலர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்ததாக அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார். மேலும், நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மாநில டிஜிபியை சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cinema
,
Indian cinema
,
Karnataka

You may also like

© RajTamil Network – 2024