Wednesday, September 25, 2024

விஜய் நாயரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

தில்லி கலால் கொள்ளை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயரின் ஜாமீன் மனு மீதான சிரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞர் ஒரு வார கால அவகாசம் கோரியதையடுத்து நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. நாயரின் மனு மீது ஆகஸ்ட் 12-ம் தேதி அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதே நேரத்தில் அவர் இரண்டு ஆண்டுகளாக காவலில் இருப்பதைக் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கடந்த 2022, நவம்பா் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட விஜய் நாயருக்கு, நிகழாண்டு ஜூலை 29-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் சட்டபூா்வ ஜாமீன் காரணத்தை பரிசீலிக்க தாம் தகுதியான அல்லது பொருத்தமான மன்றம் அல்ல என்றும், இந்த விஷயத்தை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முந்தைய அதே நீதிபதி அல்லது உயா்நீதிமன்ற அமா்வை அணுகுவதே சரியான வழி என்றும் கூறி விஜய் நாயரின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

தில்லி முன்னாள் முதல்வா் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோா் தொடா்புடைய பணமோசடி வழக்கில் விஜய் நாயா் மற்றும் பிற இணை குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி மறுத்துவிட்டது. 2021-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய கலால் கொள்கை உருவாக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநா் வி. கே. சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து, மத்திய புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் இருந்து பணமோசடி வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024