Wednesday, September 25, 2024

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கியவரை பாதுகாப்பாக மீட்ட பயணிகள்! விடியோ

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

ரயில் நிற்கும் முன்பே, ரயிலிலிருந்து இறங்கும்போது, கால் தவறி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கியவரை, ரயில்வே காவலர், பயணிகளின் உதவியோடு பத்திரமாக மீட்டுள்ளார்.

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பல்லவன் அதிவிரைவு ரயில் நடைமேடைக்கு உள்ளே வரும் பொழுது ரயில் பெட்டியில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். ரயில் நிற்பதற்கு முன்பே, அவர் தவறி விழுந்துள்ளார். இதில் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் அவர் சிக்கிக்கொண்டார். அவரை ரயில்வே காவலர் வெளியே இழுக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. பிறகு, அங்கிருந்த பயணிகளும் ரயில்வே காவலருக்கு உதவ முன்வந்தனர். இதையடுத்து அவர் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டார்.

நல்வாய்ப்பாக அவர் காயங்களுடன் உயிர் தப்பினர். ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர், அங்கிருந்த பயணிகளின் உதவியோடு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரயில்வே ஓய்வு பெற்ற ஊழியர் என்பதும் திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

You may also like

© RajTamil Network – 2024