Saturday, September 21, 2024

நான்காவது நாளாக தங்கம் விலையில் மாற்றமில்லை: மக்கள் மகிழ்ச்சி!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

தமிழகத்தில் தங்கள் விலையில் நான்காவது நாளாக ஒரே விலையில் நீடிப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கம் கண்டு வருகின்றது. ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்தைக் கடந்த விற்பனையானது. அதன்பிறகு மத்திய பட்ஜெட் அறிவிப்பிற்குப் பிறகு தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் உச்சத்திலிருந்த தங்கம் விலை சற்று சரிவைச் சந்தித்தது.

விஜய் நாயரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

கடந்த 10 நாள்களாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 53,680ஐ தாண்டாமல் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகின்றது. ஆடி மாதம் திருமணம் போன்ற விசேஷங்கள் குறைவு என்பதால் நகைக்கடையில் மக்களின் கூட்டமும் கணிசமாகக் குறைந்தே காணப்பட்டது.

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!

அதன்படி கடந்த 24-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து. ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த நான்கு நாள்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே விலையில் நீடித்து வருகின்றது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நகைக்கடைகளுக்குச் செல்லும் கூட்டமும் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 50 காசுகள் ரூ.93.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை 93,500 ஆகவும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024