Wednesday, September 25, 2024

கோலாகலமாகத் தொடங்குகிறது பாரீஸ் பாராலிம்பிக்: 4,400 வீரர்கள் பங்கேற்பு!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் 2024 ஆம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகள் புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்க இருக்கின்றது.

பாரீஸ் பாராலிம்பிக்கில் போட்டியில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4,400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்குபெறவுள்ளனர்.

இந்தப் பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளன.

அவனி லெகரா

ஒலிம்பிக்கின் போது ஸ்கேட்போர்டிங், பிரேக்கிங் மற்றும் 3×3 கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான பிளேஸ் டி லா கான்கார்ட்டில் தொடக்க விழா நடைபெறுகிறது.

ஒலிம்பிக்கின் போது கடற்கரை கைப்பந்து போட்டியை நடத்திய ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் பார்வையற்றோருக்கான கால்பந்து விளையாட்டின் தழுவலான, ஐந்து பேர் கொண்ட அணிகளில் உள்ள பார்வையற்றோருக்கான விளையாட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸின் முந்தைய தொடரை ஒப்பிடும்போது, ​​பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு 10 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாராலிம்பிக் விளையாட்டுகளின் பிறப்பிடமாகக் கருதப்படும் லண்டனின் வடமேற்கே உள்ள கிராமமான ஸ்டோக் மாண்டேவில்லில் பாரா ஒலிம்பிக் ஜோதி சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் முதல் நாள் நடைபெறவுள்ளன.

பாரா துப்பாக்கி சுடும் வீராங்கனையான அவனி லெகாரா, பாரா ஒலிம்பிக்ஸின் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார். டோக்கியோவில் இருந்து எஸ்ஹெச் 1 பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தங்கத்தை வென்றார்.

ஒக்ஸானா மாஸ்டர்ஸ்

அமெரிக்க மல்டி-ஸ்போர்ட் ஸ்பெஷலிஸ்ட் ஒக்ஸானா மாஸ்டர்ஸ் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் கை சைக்கிள் சாலை பந்தயத்தில் பதக்கம் வென்றார். மேலும், அவர் இதுவரை கோடை மற்றும் குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 7 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளார்.

பாரா பளுதூக்கும் வீரரான எகிப்தின் ஷெரிப் ஒஸ்மான் நான்காவது தங்கப் பதக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இத்தாலிய வாள்வீச்சு வீரரான பெபே ​​வியோ சக்கர நாற்காலி வாள்வீச்சில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கத்திற்காக போட்டியிடுகிறார். சிறுவயதில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அவரின் இரண்டு கால்களையும் முன்கைகளையும் துண்டித்தது குறிப்பிடத்தக்கது.

வாலண்டினா பெட்ரில்லோ

பார்வையற்ற இத்தாலிய ஓட்டப்பந்தய வீராங்கனை வாலண்டினா பெட்ரில்லோ, செப்டம்பர் 2 ஆம் தேதி, பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க உள்ளார். இவர் ​​பாராலிம்பிக்ஸில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அலி ட்ரூவிட்

அமெரிக்க நீச்சல் வீரரான அலி ட்ரூவிட் நீச்சல் பயிற்சியின் போது சுறா தாக்குதலில் தனது காலை இழந்தார். ஒரு வருடம் கழித்து தற்போது நீச்சல் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

16 வயதான ஐஸ் ஹாக்கி விளையாடும் வீரரான டேவிட் க்ராடோச்வில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான கண் நோயால் தனது பார்வையை இழந்தார். இதனால், நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ள முடிவெடுத்த அவர், கடந்த ஆண்டு 50 மற்றும் 200 மீட்டர் நீச்சல் பேக்ஸ்ட்ரோக்கில் உலக சாதனைகளை படைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 வீரர், வீராங்கனைகள் பாரீஸ் பாராலிம்பிக்கில் கலந்து கொள்ளவுள்ளனர்.

டேவிட் க்ராடோச்வில்

You may also like

© RajTamil Network – 2024