Friday, September 20, 2024

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன – கவர்னர் குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உட்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

கோவை,

கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 'புதிய பாரதத்தில் கல்விச் சீர்த்திருத்தங்கள்' என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போராட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை. தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றிய பாடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பற்றிய மிகைப்படுத்துதலும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் உள்ளன. நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகிறது. கல்வி அமைப்பை சீர் செய்வதற்கு, மார்க்சிய சிந்தனை உட்பட பல சிந்தனைகள் தடையாக உள்ளன.

இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை. இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல. ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு வரை நூற்றாண்டுகளாக பாரத் என்றே அழைக்கப்பட்டு வந்தது. பாரத் என்றால் ஒளி. பாரத் என்பதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புரிந்து கொள்ள முடியும். இந்தியா என்பது பாரத் என்பதை ஒத்த அர்த்தமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024