Wednesday, September 25, 2024

ஆப்கனில் குற்றங்கள் 30 சதவீதம் குறைந்துள்ளன: ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம்!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ஆப்கனில் தேசப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகவும், குற்றங்கள் 30 சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் உள்துறை துணை அமைச்சர் முகமது நபி ஓமாரி ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படும் செயல்பாட்டு அறிக்கையை இன்று சமர்ப்பித்தார். அதில், கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பாக வாழவும் நாட்டிற்குள் சுதந்திரமாக பயணம் செய்யவும் முடிகிறது எனக் குறிப்பிட்டார்.

தலிபான் தலைவர் முல்லா ஹிபாத்துல்லா அகுந்த்ஸதா வழிகாட்டுதல் மற்றும் நீதிமன்ற ஆணைகளின்படி நிர்வாக முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக ஓமாரி தெரிவித்தார்.

உக்ரைன் போர்: ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

மேலும், “நாட்டில் குற்றச்செயல்கள் 30 சதவீதம் குறைந்துள்ளன. பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, அமைச்சகம் சார்பில் தேசிய காவல்துறை பயிற்சி மையங்களை மேம்படுத்தவுள்ளோம். அதுமட்டுமின்றி காவல்துறையினர் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறனை பெறுவதற்கானப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு மட்டும் அரசு அதிகாரிகள் 3,643 டன்கள் போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், 790 போதைப்பொருள் உற்பத்தி மையங்களை அகற்றியுள்ளனர். போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் 10,564 கைது செய்யப்பட்டு, 27,891 பேர் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 17,651 ஹெக்டேர் கஞ்சா பயிர்கள் அகற்றப்பட்டுள்ளது.

தலிபான் தூதரை ஏற்றது யுஏஇ

கடத்தலில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் அதிக அளவிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல்காரர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஆளும் தலிபான் அரசு பொருளாதாரப் பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள், முதலீடுகளை உருவாக்குதல், தேசிய எல்லைப் பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட பொதுச்சேவை, தேசத்தின் சமச்சீரான வளர்ச்சி என அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதாக அரசு சார்பில் கூறியுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024