Wednesday, September 25, 2024

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிவை சந்தித்த பாகிஸ்தான்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

ஆஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் பாகிஸ்தான் அணி 8-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் பாகிஸ்தான் 8-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது

16 புள்ளிகள் மற்றும் 22.22 வெற்றி சதவிகிதத்துடன் பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு முன்பாக 8-வது இடத்தில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்த வங்கதேசம் 21 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது பாகிஸ்தான் அணி மெதுவாக ஓவர் வீசியதால் அந்த அணிக்கு 6 புள்ளிகள் குறைக்கப்பட்டன. இதனையடுத்து, தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் சரிவை சந்தித்தது. மெதுவாக பந்துவீசியதால் வங்கதேசத்துக்கும் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன.

Over-rate penalties impact both Pakistan and Bangladesh #WTC25 campaigns
More https://t.co/Su6uIT7fTopic.twitter.com/0iyvlxmTms

— ICC (@ICC) August 27, 2024

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியா தொடர்: பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 74 புள்ளிகள் மற்றும் 68.52 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024