Friday, September 20, 2024

டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் (பி பிரிவு) மோதுகிறது .

பிரிட்ஜ்டவுன்,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் (பி பிரிவு) மோதுகிறது

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு இங்கிலாந்துக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் 39 ரன் வித்தியாசத்தில் ஓமனை தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் அரைசதம், 3 விக்கெட் என்று ஆல்-ரவுண்டராக மார்கஸ் ஸ்டோனிஸ் ஜொலித்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் 23 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 10-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (டி பிரிவு) சந்திக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 77 ரன்னில் சுருட்டிய தென்ஆப்பிரிக்கா 2-வது வெற்றியை குறி வைத்து களம் காணுகிறது. 2-வது பேட்டிங் செய்யும் அணிகளே ஆதிக்கம் செலுத்துவதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும்.

அதே சமயம் தனது முதல்ஆட்டத்தில் நேபாளத்தை வென்ற நெதர்லாந்து கடும் சவால் அளிக்க வியூகங்களை தீட்டுகிறது. இவ்விரு அணிகள் இதற்கு முன்பு 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றிருப்பதால் நெதர்லாந்து அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் ஆடுவார்கள்.

You may also like

© RajTamil Network – 2024