Friday, September 20, 2024

‘வாழை’ திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய பிரதீப் ரங்கநாதன்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

'வாழை' திரைப்படத்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பிரதீப் ரங்கநாதன் பாராட்டி பேசியுள்ளார்.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 23-ந் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து வாழை படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் 'வாழை' திரைப்படத்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டி பேசியுள்ளார். அதில், 'இந்த படம் அருமையாக இருந்தது, இந்த படத்தை பார்த்தவுடன் மாரிசெல்வராஜ் அவர்கள் மீது மரியாதை கூடியது, இந்த படத்தில் அவருடைய கதையை பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. மேலும் இப்படம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நன்றியும் ப்ரியமும் ⁦@pradeeponelife⁩ bro ❤️❤️ #vaazhaipic.twitter.com/Hggh0cZ1kx

— Mari Selvaraj (@mari_selvaraj) August 27, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024