பூண்டி சத்யமூர்த்தி அணையில் 2 கதவணைகள் மாற்றும் பணி தொடக்கம்!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி சத்யமூர்த்தி அணையில் பழுதடைந்திருக்கும் 2 கதவணைகளை மாற்றும் பணி இன்று காலை தொடங்கியது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணைகளில் ஒன்றான, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்யமூர்த்தி அணையில், இரண்டு கதவணைகள் பழுதடைந்திருந்ததால், நீர் வீணாகி வந்தது.

எனவே, பழுதடைந்த 2 கதவணைகள் மாற்றப்பட்டு புதிய கதவணைகள் பொறுத்தும் பணி தொடங்கியிருக்கிறது.

பூண்டி சத்தியமூர்த்தி அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில், 8 மற்றும் 9வது எண் கொண்ட மணல் வாரி கதவணைகளில் பழுது ஏற்பட்டு, நீர்க்கசிவு ஏற்பட்டது. ஆனால், அப்போது அணை முழுக்க தண்ணீர் நிரம்பி இருந்ததால் உடனடியாக அதனை சரி செய்ய முடியாத நிலை காணப்பட்டது.

எப்போதும் சங்கி என்பார்கள், பூமர் அங்கிள் என்று கூறியிருப்பது மகிழ்ச்சியே: ஸ்ரீதர் வேம்பு

தற்போது அணையில் நீர் இருப்பு குறைந்ததால், 2 கதவணைகளை மாற்றவும் மேலும் 14 கதவணைகளை சீரமைக்கவும் தமிழக அரசு, ரூ.9.84 கோடி நிதி ஒதுக்கியிருந்தது.

இந்த நிலையில், அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இரண்டு கதவணைகளை மாற்றிவிட்டு, மற்ற கதவணைகளை சீரமைக்கும் பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024