Saturday, September 21, 2024

7வது நாளாக உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்! ஐடி துறை பங்குகள் உயர்வு!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

வாரத்தின் 3வது வணிக நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி சற்று உயர்வுடன் முடிந்தது. பங்குச்சந்தையில் ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 73.80 புள்ளிகள் உயர்ந்து 81,785.56 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது0.090 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.60 புள்ளிகள் சரிந்து 25,052.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.14 சதவீதம் உயர்வாகும்.

பங்குச்சந்தை சென்செக்ஸ் 81,779.84 என்ற புள்ளிகளுடன் தொடங்கி பின்னர் 81,578.32 என்ற அளவுக்கு சரிந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 82,039.26 என்ற அதிகபட்சத்தை எட்டியது.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள 30 தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 20 நிறுவனப் பங்குகள் சரிந்தன.

அதிகபட்சமாக இந்தஸ்இந்த் வங்கி 2.36%, பார்தி ஏர்டெல் 2.21%, இன்ஃபோசிஸ் 2.06%, சன் பார்மா 1.26%, எம்&எம் 0.62%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 0.56%, பஜாப் ஃபைனான்ஸ் 0.54%, எச்சிஎல் 0.46%, டிசிஎஸ் 0.20%, டெக் மஹிந்திரா 0.17% பங்குகள் உயர்ந்திருந்தன.

இதேபோன்று ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. அதற்கு அடுத்தபடியாக நெஸ்ட்லே இந்தியா, மாருதி சிசூகி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, கோட்டாக் வங்கி, டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

இதேபோன்று நிஃப்டி பட்டியலிலுள்ள 50 தரப் பங்குகளில் மைன்ட் ட்ரீ, விப்ரோ, திவிஸ் லேப்ஸ், இந்தஸ்இந்த், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் லாபப் பதிவில் இருந்தன.

You may also like

© RajTamil Network – 2024