Saturday, September 28, 2024

மாநிலங்களவையில் மீண்டும் பெரும்பான்மையை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

மாநிலங்களவையில் மீண்டும் பெரும்பான்மையை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிமாநிலங்களவையில் மீண்டும் பெரும்பான்மையை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலங்களவையில் மீண்டும் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 9 மாநிலங்களில் இருந்து காலியாக உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் செப்.3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில், 12 இடங்களுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, அரியானாவில் இருந்து கிரண் சவுத்ரி, அசாமில் இருந்து ராமேஷ்வர் டெலி, பீகாரில் இருந்து மனன் குமார் மிஸ்ரா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து ஜார்ஜ் குரியன், மகாராஷ்டிராவில் இருந்து தைரிஷீல் பாட்டீல், ஒடிசாவில் இருந்து மம்தா மொஹந்தா, ராஜஸ்தானில் இருந்து ரவ்னீத் சிங் பிட்டு, திரிபுராவில் இருந்து ராஜீப் பட்டாச்சார்யா உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
“30 ஆண்டுகளாக அந்த அழுத்தம்” – திருமணம் குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி

மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 237ஆக உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 119 தேவை. இந்த சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. இதில் பாஜகவுக்கு 96 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 4 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 3 உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 18 பேரும் உள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Rajya Sabha
,
Rajya Sabha Election

You may also like

© RajTamil Network – 2024