கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், வழக்கினை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி முகாம் நடத்த முடியும்? குற்றம் சாட்டப்பட்ட சிவராமனை முகாம் நடத்த எப்படி பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியது? யார் அனுமதி வழங்கினார்கள்? சம்பந்தப்பட்ட பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனுமதி வழங்கிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

குற்றம் சாட்டப்பட்ட சிவராமனும் உயிரிழந்துள்ளார், அவரது தந்தையும் அதேநாளில் இறந்துள்ளார் என்றும் சந்தேகம் எழுப்பினர்.

சிவராமன் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றவர் என்றும் அவரது தந்தை அன்றைய தினம் விபத்தில் உயிரிழந்ததாகவும் எனவே இந்த விசாரணையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இன்றைய வழக்கின் விசாரணை முடிவில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை செப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அன்று, பிரதமர் மோடியின் வங்கிக் கணக்கு மூடப்பட்டது! ஏன்?

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனா். இம் முகாமில் பங்கேற்ற மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கு கட்டடத்தில் தங்கி பயிற்சியில் பங்கேற்றனா்.

இந்த மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவராமன் (30) என்பவா் தலைமையிலான குழுவினா் பயிற்சி அளித்தனா். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் மேலும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

‘மன்னிக்கவும், பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும்’ – மம்தா

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் போலீசார் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளா் சிவராமன், பள்ளி முதல்வா் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்று பள்ளி முதல்வர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராமனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், சிவராமன் விஷத் தன்மை கொண்ட எலி பசை சாப்பிட்டு உயிரிழந்தார். சிவராமனின் தந்தையும் விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை தொடர்கிறது.

You may also like

© RajTamil Network – 2024