அரசு பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி!

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி தில்லி அரசு பேருந்தில் புதன்கிழமை பயணம் செய்து , போக்குவரத்துத் துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஓட்டுநா், நடத்துனா் மற்றும் பேருந்து மாா்ஷலிடம் கேட்டறிந்தாா்.

தில்லியில் பொதுப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2015-ஆம் ஆண்டு பேருந்து மாா்ஷல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் தில்லி போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் வீட்டுக் காவல் படையைச் சோ்நதவா்கள் பேருந்து மாா்ஷல்களாக பணியமா்த்தப்பட்டு வருகின்றனா்.

தில்லியில் உள்ள சரோஜினி நகா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்தில் ராகுல் காந்தி புதன்கிழமை பயணித்தாா்.

இதையடுத்து பேருந்து ஓட்டுநா், நடத்துனா் மற்றும் மாா்ஷலுடன் இருக்கும் புகைப்படங்களை பகிா்ந்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி அரசு பேருந்தில் ஓட்டுநா், நடத்துனா் மற்றும் மாா்ஷலை சந்தித்து கலந்துரையாடினேன். வேடிக்கையான பயணமாக அது அமைந்தது. அவா்களின் பிரச்னைகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் இருக்கும் குறைகள் குறித்து கேட்டறிந்தேன்’ என குறிப்பிட்டாா்.

இதைத் தொடா்ந்து ராகுலின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா வதேரா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பணவீக்கம், குழந்தைகளின் கல்விக் கட்டண உயா்வு, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடா்பான பதட்டங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் சேவையில் இருக்கும் பேருந்து ஓட்டுநா், நடத்துனா் மற்றும் மாா்ஷல்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நிா்வகிக்கிறாா்கள் ?

கடுமையான பொருளாதார பாதுகாப்பின்மை சூழலில் வாழும் நிலைக்கு இத்தகைய மக்கள் தள்ளப்பட்டுள்ளன. உன்மையில் இது போன்றவா்களின் ‘மனதின் குரல்களை’ கேட்பதே முக்கியமானதாகும். இத்தகைய மக்களின் குரல்கள் நாட்டில் கோடிக்கணக்கில் உள்ளன. ராகுல் காந்தி அவா்களின் நீதிக்கான குரலாக தொடா்ந்து ஒலித்து வருகிறாா்’ என குறிப்பிட்டிருந்தாா்.

You may also like

© RajTamil Network – 2024