குஜராத்தில் கனமழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழைக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஐ தாண்டியுள்ளது.

மேலும் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வரும் மக்களை படகு மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். குஜராத்தில் 122 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல் -மந்திரி பூபேந்திர படேலிடம் வெள்ளப்பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதி அளித்தார். இதற்கிடையே அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024