10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை, 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி வெளியானது. தேர்வு எழுதியவர்களில் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று (வியாழக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இன்று (29-ந்தேதி) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024